/உள்ளூர் செய்திகள்/தேனி/ பாதாம் பால் பவுடர் உற்பத்தி அதிகரிக்க ஆவின் முடிவு பாதாம் பால் பவுடர் உற்பத்தி அதிகரிக்க ஆவின் முடிவு
பாதாம் பால் பவுடர் உற்பத்தி அதிகரிக்க ஆவின் முடிவு
பாதாம் பால் பவுடர் உற்பத்தி அதிகரிக்க ஆவின் முடிவு
பாதாம் பால் பவுடர் உற்பத்தி அதிகரிக்க ஆவின் முடிவு
ADDED : ஜூலை 03, 2025 12:26 AM
தேனி: தேனி மாவட்ட ஆவினில் தயாரிக்கப்படும் பாதாம் பால் பவுடர் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் ஆவின் மூலம் தினமும் 55 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. சில மாதங்களாக மாவட்டத்திலேயே ஆவின் பால்பவுடரை பயன்படுத்தி பாதாம் பால் பவுடர், பால் கோவா தயாரிக்கப்படுகிறது. தேனியில் தயாரிக்கப்படும் பாதாம் பால் பவுடர் விற்பனைக்காக சென்னைக்கு அனுப்பபடுகிறது. கடந்த சில மாதங்களாக தலா ஒரு டன் பாதாம் பால் பவுடர் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் தேனி ஆவினுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. தொடர்ந்து பாதாம் பவுடர் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.