/உள்ளூர் செய்திகள்/தேனி/'விண்ணில் ஒரு பார்வை': விழிப்புணர்வு நிகழ்ச்சி'விண்ணில் ஒரு பார்வை': விழிப்புணர்வு நிகழ்ச்சி
'விண்ணில் ஒரு பார்வை': விழிப்புணர்வு நிகழ்ச்சி
'விண்ணில் ஒரு பார்வை': விழிப்புணர்வு நிகழ்ச்சி
'விண்ணில் ஒரு பார்வை': விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 29, 2024 06:30 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி முத்துகிருஷ்ணாபுரம் ஜெய் கிரிஷ் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் நட்சத்திரங்கள், கோள்களைப் பற்றி மாணவர்கள், பொது மக்கள் தெரிந்து கொள்வதற்கான 'விண்ணில் ஒரு பார்வை' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தாளாளர் கயல்விழி தலைமை வகித்தார். முதல்வர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். கோவையில் இருந்து இதற்காக வரவழைக்கப்பட்ட டெலஸ்கோப் கருவி உதவியுடன் விண்வெளி ஆராய்ச்சி மைய நிபுணர் முருகேசன்மூலம் வானில் நட்சத்திரங்களை பார்க்கும் வசதியுடன் அதற்கானவிளக்கமும் கொடுக்கப்பட்டது.
மாணவ, மாணவிகள், பெற்றோர், பொது மக்கள் சோலார் கண்ணாடி மூலம் சூரியனை பார்வையிட்டனர். சூரியன், நட்சத்திரங்கள், சூரியன் நெபுலா, நிலவின் மேல் பரப்பு, சனி, வியாழன் கோள்களையும் அதிகாலை வெள்ளி கோளையும் பார்வையிட்டனர்.வகுப்பறைகளில் வானின் வர்ண ஜாலங்கள் தத்ரூபமாக புகைப்படங்களாகவும் ஓவியங்களாகவும் வரைந்து மின்விளக்கு அலங்காரத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்தன.
இதற்கான சிறப்பு ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.