/உள்ளூர் செய்திகள்/தேனி/ மனஅழுத்தத்தை குறைக்க உதவும் மாடித்தோட்டம் மனஅழுத்தத்தை குறைக்க உதவும் மாடித்தோட்டம்
மனஅழுத்தத்தை குறைக்க உதவும் மாடித்தோட்டம்
மனஅழுத்தத்தை குறைக்க உதவும் மாடித்தோட்டம்
மனஅழுத்தத்தை குறைக்க உதவும் மாடித்தோட்டம்

மாசில்லா சூழல்
வெங்கட்குமார், இயற்கை ஆர்வலர், கம்பம் : வெளியில் சென்று வீடு திரும்பும் போது எப்போதும் ஒரு சோர்வுடன் கூடிய வெறுமை இருக்கும். ஆரம்பத்தில் வீட்டில் உள்ளவர்களிடம் அந்த கோபத்தோடு பேசுவேன். மாடியில் பூந்தொட்டிகள் சிலவற்றை வாங்கி வைத்து, அவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சுவது, அவற்றை பராமரிக்க துவங்கியவுடன் அந்த கோபம் பறந்து விட்டது. மனது இதமாகி எளிதானது.
கோபம் குறைய எளியவழி
செல்வராணி, குடும்பத் தலைவி : முதலில் துளசி, துாதுவளை, வில்வம் போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை வளர்க்க ஆரம்பித்தேன். எனது கணவர் மலர் செடிகளை வளர்க்கத் துவங்கினார். எங்களுக்குள் மாடித் தோட்டம் அமைப்பதில் போட்டி ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து தற்போது 50க்கும் மேற்பட்ட மூலிகை, மலர்கள், காய்கறி செடிகளை வளர்த்து வருகிறோம். இடமில்லை என்பதால் ஜன்னல், மாடிப்படி, சுவர்களிலும் ஆணி அடித்து அதிலும் வளர்க்கிறோம். படுக்கை அறை, வரவேற்பறையில் கற்றாழை, அழகு பூச் செடிகள் அமைத்துள்ளோம். குறிப்பாக படுக்கை அறையில் சுவாசிக்க ஆக்சிஜன் தரும் தாவரங்களை வைத்துள்ளோம்.