Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/வட்டார போக்குவரத்து அலுவலகங்களில்காட்சிப்பொருளான சோதனை வாகனங்கள் திட்டம் அமல்படுத்துவதில் தொடரும் சிக்கல்

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில்காட்சிப்பொருளான சோதனை வாகனங்கள் திட்டம் அமல்படுத்துவதில் தொடரும் சிக்கல்

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில்காட்சிப்பொருளான சோதனை வாகனங்கள் திட்டம் அமல்படுத்துவதில் தொடரும் சிக்கல்

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில்காட்சிப்பொருளான சோதனை வாகனங்கள் திட்டம் அமல்படுத்துவதில் தொடரும் சிக்கல்

ADDED : ஜன 05, 2024 12:50 AM


Google News
தேனி:தமிழகத்தில் 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 54 பிரிவு அலுவலகங்களுக்கு வழங்கப்பட்ட 145 கார்கள் உரிய வழிகாட்டுதல் நடைமுறைகள் வழங்கப்படாததால் காட்சிப்பொருளாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இத்திட்டம் அமலாவதில் சிக்கல் நீடிக்கிறது.

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் டிரைவிங் லைசென்ஸ் பெற சொந்தமான வாகனங்களை கொண்டு வர வேண்டும் எனற நடைமுறைக்கு விடை கொடுக்கும் வகையில் லைசென்ஸ் பெற விண்ணப்பித்தோர் கார் கொண்டு வர தேவையில்லை என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு 145 பயிற்சி கார்கள் வழங்கப்பட்டன. இந்த கார்கள் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

காட்சிப் பொருளான அவலம்:


இந்நிலையில் தினசரி, மாத பயன்பாட்டிற்கான எரிபொருள் செலவு விபரம், ஓட்டுனநருக்கான டுயல் சிஸ்டம் மேம்படுத்துதல், ஒரு நபர் பரிசோதனைக்கான கட்டண விபரம், பராமரிப்பு செலவினம் உள்ளிட்டவை குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுகே்கு அரசு முறைப்படி தெரிவிக்கவில்லை. இதனால் மக்கள் பயன்பாட்டிற்கான இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கார்கள் காட்சிப்பொருளாக நிறுத்தப்பட்டுள்ளன.

வட்டார போக்குவரத்துத்துறை அலுவலர்கள் கூறுகையில்,

டிரைவிங் லைசென்ஸ் பெறும் நபர்களுக்கு இது நல்ல திட்டம். சொந்த வாகனம் இல்லாத பலர் உரிமம் பெறாமல் உள்ளனர்.

அவர்களுக்கு இத்திட்டம் உதவும். ஆனால் இத்திட்டத்திற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வகுத்து உத்தரவிட வேண்டும். வழிகாட்டுதல் இல்லாததால் கார்கள் பயன்பாட்டிற்கு வர காலதாமதம் ஆகிறது,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us