Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாவட்டத்தில் 81.4 சதவீதம் 'கிராப் சர்வே' பணிகள் நிறைவு மலைப்பகுதிகளில் தொடரும் சிரமம்

மாவட்டத்தில் 81.4 சதவீதம் 'கிராப் சர்வே' பணிகள் நிறைவு மலைப்பகுதிகளில் தொடரும் சிரமம்

மாவட்டத்தில் 81.4 சதவீதம் 'கிராப் சர்வே' பணிகள் நிறைவு மலைப்பகுதிகளில் தொடரும் சிரமம்

மாவட்டத்தில் 81.4 சதவீதம் 'கிராப் சர்வே' பணிகள் நிறைவு மலைப்பகுதிகளில் தொடரும் சிரமம்

ADDED : செப் 07, 2025 03:40 AM


Google News
தேனி: மாவட்டத்தில் ஆடிமாதம் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கணக்கெடுப்பு பணி 81.4 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

தமிழகத்தில் ஆடி, கார்த்திகை, கோடையில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு பாசனம் உள்ள சின்னமனுார், உத்தமபாளையம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முப்போகம் சாகுபடி ஆகிறது.நீர் இருப்பை பொருத்து சாகுபடி வேறுபடுகிறது. ஒவ்வொரு சாகுபடியின் போது எந்த வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது என கண்டறிவதற்கும், ஏதேனும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் நிவாரணங்கள் வழங்க ஏதுவாக கிராப் சர்வே பணிகள் கடந்தாண்டு துவங்கப்பட்டது. அது தோல்வியடைந்ததால், கல்லுாரி மாணவர்கள் மூலம் கார்த்திகை, கோடைபட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டது. பயிர்கள் தனியார் மூலம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 3,96,645 சர்வே நிலங்கள் கணக்கெடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.வட்டாரம் வாரியாக ஆண்டிபட்டி 50,008, போடி 44,098, சின்னமனுார் 36,371, கம்பம் 33,441, கடமலைகுண்டு 21,312, பெரியகுளம் 62,002, தேனி 37,048, உத்தமபாளையம் 38,759 என மொத்தம் 3,23,039 சர்வே எண்கள் கணக்கெடுப்பு முடிந்துள்ளது. அதாவது மொத்த இலக்கில் 81.4 சதவீதம் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

பதிவேற்றுவதில் சிரமம்: மாவட்டத்தில் சில மலைபகுதிகள், தொலைதொடர்பு வசதி இல்லாத பகுதிகளில் கணக்கெடுப்பு பணியில் சிரமம் உள்ளது. அலைபேசி சிக்னல் இல்லாததால் பதிவேற்றம் செய்ய காலதாமதம் ஏற்படுகிறது. விரைவில் முழுமடையும் என வேளாண்துறையினர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us