/உள்ளூர் செய்திகள்/தேனி/ கார் மோதி ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் காயம் கார் மோதி ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் காயம்
கார் மோதி ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் காயம்
கார் மோதி ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் காயம்
கார் மோதி ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் காயம்
ADDED : செப் 14, 2025 03:57 AM
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாண்டியன் 40. நேற்று முன்தினம் வெளியூரைச் சேர்ந்த சிலர் முத்தனம்பட்டியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல ஆண்டிபட்டியில் இருந்து ஆட்டோவில் சென்றனர்.
மதுரை தேனி மெயின் ரோட்டில் முத்தனம்பட்டி அருகே சென்ற போது பின்னால் சென்ற கார் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த பால்பாண்டி 47, வசந்தா 44, நாகராஜன் 45, பிரியதர்ஷினி 21, மேக்கிழார்பட்டி காமராஜ் 54, பாண்டியன், கொண்டமநாயக்கன்பட்டி பிச்சைமணி 41, ஆட்டோ டிரைவர் பாண்டியன் ஆகியோர் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து க.விலக்கு போலீசார் கார் டிரைவர் பெரியகுளம் எ.புதுப்பட்டியை சேர்ந்த சுருளிவேல் 41,யிடம் விசாரிக்கின்றனர்.