/உள்ளூர் செய்திகள்/தேனி/ பி.டி.ஓ.,க்கள், செயலர்கள் 54 பேர் பட்டறிவு பயணம் பி.டி.ஓ.,க்கள், செயலர்கள் 54 பேர் பட்டறிவு பயணம்
பி.டி.ஓ.,க்கள், செயலர்கள் 54 பேர் பட்டறிவு பயணம்
பி.டி.ஓ.,க்கள், செயலர்கள் 54 பேர் பட்டறிவு பயணம்
பி.டி.ஓ.,க்கள், செயலர்கள் 54 பேர் பட்டறிவு பயணம்
ADDED : ஜூலை 03, 2025 12:26 AM
தேனி: ஊராட்சிகளில் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ஊரக வளர்ச்சித்துறையினர் 54 பேர் பட்டறிவு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊராட்சிகளில் மத்திய, மாநில அரசு திட்டங்களான வேலை வாய்ப்பு, குடிநீர், அனைவருக்கும் வீடு, சுகாதாரம், சுயதொழில் முனைவோர் பயிற்சி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. சிறந்து விளங்கும் ஊராட்சிகளுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் சரவணக்குமார், மலர்விழி தலைமையில் 16 டி.பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலாளர்கள் 31 பேர், 3 மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 54 பேர் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பட்டறிவு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இப்பயணம் பற்றி அதிகாரிகள் கூறுகையில், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 5 ஊராட்சிகளில் அனைத்து அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இவ்ஊராட்சிகள் சில விருதுகளும் பெற்றுள்ளன. அங்கு மக்கள் ஒத்துழைப்புடன் எவ்வாறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதே போன்று தேனி மாவட்டத்தில் செயல்படுத்த உள்ளோம் என்றனர்.