/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனீக்கள் கொட்டியதில் 42 மாணவருக்கு சிகிச்சை தேனீக்கள் கொட்டியதில் 42 மாணவருக்கு சிகிச்சை
தேனீக்கள் கொட்டியதில் 42 மாணவருக்கு சிகிச்சை
தேனீக்கள் கொட்டியதில் 42 மாணவருக்கு சிகிச்சை
தேனீக்கள் கொட்டியதில் 42 மாணவருக்கு சிகிச்சை
ADDED : ஜூலை 04, 2025 07:21 AM
போடி; தேனி மாவட்டம், போடி ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று மதியம் 2:00 மணியளவில் மாணவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது மாணவர் ஒருவர் பந்தை தூக்கி மேலே எரிந்ததில் மரத்தில் இருந்த தேன் கூட்டில் பந்து விழுந்தது. கூட்டை விட்டு வெளியே வந்த தேனீக்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 42 மாணவர்களை கொட்டியது. இரண்டு மாணவர்களுக்கு முகத்தில் வீக்கம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவர்களை பள்ளி வேனில் ஏற்றி போடி அரசு மருத்துவமனையில் ஆசிரியர்கள் சேர்த்தனர். மாணவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.