/உள்ளூர் செய்திகள்/தேனி/ பதுக்கிய 260 பண்டல் புகையிலை பறிமுதல் பதுக்கிய 260 பண்டல் புகையிலை பறிமுதல்
பதுக்கிய 260 பண்டல் புகையிலை பறிமுதல்
பதுக்கிய 260 பண்டல் புகையிலை பறிமுதல்
பதுக்கிய 260 பண்டல் புகையிலை பறிமுதல்
ADDED : செப் 16, 2025 04:57 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் பி.டி.ஆர்., காலனியில் முகமது பாரூக் 55 என்பவர் வீட்டை எஸ்.ஐ. பாலசுப்ரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் 220 ( ஒவ்வொரு பண்டலும் 225 கிராம் எடை கொண்டது ) ஆக 49 கிலோ 500 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தவிர கூல் லிப் புகையிலை பண்டங்கள் 201 ( ஒவ்வொன்றும் 100 கிராம் எடை ) மொத்தம் 20 கிலோ 100 கிராம். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை 69 கிலோ 600 கிராமாகும். இதன் மதிப்பு ரூ.68 ஆயிரத்து 208 ஆகும். இது தொடர்பாக முகமது பாரூக் கைது செய்யப்பட்டார். உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.