Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ நிறமூட்டிய 20 கிலோ காலிபிளவர்   பறிமுதல்

நிறமூட்டிய 20 கிலோ காலிபிளவர்   பறிமுதல்

நிறமூட்டிய 20 கிலோ காலிபிளவர்   பறிமுதல்

நிறமூட்டிய 20 கிலோ காலிபிளவர்   பறிமுதல்

ADDED : மே 10, 2025 07:43 AM


Google News
தேனி: தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மதன்குமார், அலுவலர்கள் ஜனஹர், கோபிநாதன், சுரேஷ்கண்ணன், சக்தீஸ்வரன், மணிமாறன் ஆகியோர் அடங்கிய ஆய்வுக்குழுவினர், கடந்த 2 நாட்களாக வீரபாண்டி சித்திரை திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட தற்காலிக கடைகளில் உணவின் தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் கெட்டுப்போன மிக்சர் 10 கிலோ விற்பனைக்கு வைத்திருந்தவரை கண்டித்து, அதனை கைப்பற்றி எச்சரித்தனர்.

பின் காலிபிளவரில் நிறமூட்டி பவுடர்களை சேர்த்து பொறியல்களை விற்பனைக்கு வைத்திருந்தனர்.

அவ்வாறு வைக்கப்பட்ட 20 கிலோ காலி பிளவர்களை கைப்பற்றி, உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us