/உள்ளூர் செய்திகள்/தேனி/ 9 மாதங்களில் 20 பசுக்கள் புலியிடம் சிக்கி பலி 9 மாதங்களில் 20 பசுக்கள் புலியிடம் சிக்கி பலி
9 மாதங்களில் 20 பசுக்கள் புலியிடம் சிக்கி பலி
9 மாதங்களில் 20 பசுக்கள் புலியிடம் சிக்கி பலி
9 மாதங்களில் 20 பசுக்கள் புலியிடம் சிக்கி பலி
ADDED : செப் 23, 2025 04:46 AM
மூணாறு: எஸ்டேட் பகுதிகளில் ஒன்பது மாதங்களில் 20 பசுக்கள் புலியிடம் சிக்கி பலியானது. 13 பசுக்கள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பின.
மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் யானை, காட்டு மாடு, புலி, சிறுத்தை ஆகியவற்றின் நடமாட்டம் அதிகரித்துள்ளன. அவை பல்வேறு சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உப வருமானத்திற்காக பசுக்கள் வளர்க்கின்றனர். அவற்றை புலிகள் வேட்டையாடுவதால் பலியாகும் பசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜனவரி ஒன்று முதல் நேற்று முன்தினம் வரை 20 பசுக்கள் பலியான நிலையில் 13 பசுக்கள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பின.
பலி விபரம்
ஜன.7, பிப்.2, ஏப்.3, ஜூன் 1, ஜூலை 2, ஆக.3, செப்.2 என 20 பசுக்கள் பலியாகின. கடந்தாண்டு 33 பசுக்கள் பலியானது குறிப்பிடதக்கது.
புலிகளிடம் சிக்கி பசுக்கள் பலியாகி வரும் நிலையில், அவற்றிற்கு வனத்துறையினர் முறையாக இழப்பீட்டு தொகை வழங்குவதில்லை. அதனால் தொழிலாளர்கள் இடையே பசுக்களை வளர்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறது.