/உள்ளூர் செய்திகள்/தேனி/18ம் கால்வாய் சீரமைத்து மீண்டும் தண்ணீர் திறப்பு18ம் கால்வாய் சீரமைத்து மீண்டும் தண்ணீர் திறப்பு
18ம் கால்வாய் சீரமைத்து மீண்டும் தண்ணீர் திறப்பு
18ம் கால்வாய் சீரமைத்து மீண்டும் தண்ணீர் திறப்பு
18ம் கால்வாய் சீரமைத்து மீண்டும் தண்ணீர் திறப்பு
ADDED : ஜன 10, 2024 12:46 AM
கூடலுார் : லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் துவங்கி கூடலுார், கம்பம், உத்தமபாளையம், பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 47 கி.மீ., தூர 18ம் கால்வாய் திட்டம் மூலம் 6500 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகிறது. இது தவிர 43 கண்மாய்கள் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மறைமுக பாசனமும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கால்வாயில் அக்டோபரில் தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் அணையில் நீர் இருப்பு இருந்தும் தாமதமாக 2023 டிச.19ல் திறக்கப்பட்டது.
திறக்கப்பட்ட தண்ணீர் கோம்பையை கடந்து செல்வதற்குள் டிச. 31ல் லோயர்கேம்ப் அருகே கரைப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.
மேலும் தம்மணம்பட்டி அருகே தொட்டி பாலத்தில் நீர்க்கசிவு அதிகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த சீரமைப்பணி முடிந்து நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 50 கன அடி நீர் வீதம் இரண்டாவது முறையாக திறக்கப்பட்டது. பெரியாறு அணையில் 105 கன அடி நீர்மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும்போது 18ம் கால்வாயிலும் நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


