Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கம்பம் நகராட்சி தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 17 பேர் ராஜினாமா

 கம்பம் நகராட்சி தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 17 பேர் ராஜினாமா

 கம்பம் நகராட்சி தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 17 பேர் ராஜினாமா

 கம்பம் நகராட்சி தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 17 பேர் ராஜினாமா

ADDED : டிச 02, 2025 04:44 AM


Google News
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு தி.மு.க.,வை சேர்ந்த வனிதா தலைவராகவும், சுனோதா துணைத் தலைவராகவும் உள்ளனர். நகராட்சியில் தி.மு.க.,- 24, காங்.,- 1, இ.மு.லீக்.,- 1, அ.தி.மு.க.,- 7 கவுன்சிலர்கள் உள்ளனர்.

ஆகஸ்ட் முதல் கவுன்சிலர்களுக்கும் தலைவருக்கும் மோதல் ஏற்பட்டது. தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து தோல்வியடைந்தது. பிறகு அமைச்சர் நேரு முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

நேற்று மாலை நகராட்சி கூட்டம் தலைவர் வனிதா தலைமையில் துவங்கியது. கவுன்சிலர் முருகன் (அ.தி.மு.க.,), நேற்று இரவு தான் அஜெண்டா கொடுத்தார்கள். தூய்மைப் பணியாளர்கள் காலை உணவு திட்டம் , மாற்றுத் திறனாளிகள் கவுன்சிலராக நியமன ஒப்புதல் தீர்மானங்களை தவிர்த்து மற்ற தீர்மானங்களை ஒத்தி வையுங்கள், என்றார்.தலைவர் வனிதா, ''வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு பேசுங்கள். கையெழுத்து போடாமல் பேசக்கூடாது. அரசு அறிவுறுத்தலின் படி நடக்கும் கூட்டம்,'' என்றார்.

அதிருப்தியடைந்த தி.மு.க., கவுன்சிலர்கள் 14 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் என 17 பேர் வெளியேறி, தங்களின் ராஜினாமா கடிதத்தை கமிஷனரிடம் வழங்கினர்.கமிஷனர் உமாசங்கர் கூறுகையில், ''17 கவுன்சிலர்கள் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளனர். இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்றார். ராஜினாமா செய்த கவுன்சிலர்கள் கூறுகையில், 'அரசின் இரு தீர்மானங்களை தவிர மற்ற தீர்மானங்களை ஒத்தி வைக்க கோரினோம். தலைவர் கையெழுத்து போடாவிட்டால் வெளியேறுங்கள், என கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தார் .

14 தி.மு.க., 3 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளோம்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us