/உள்ளூர் செய்திகள்/தேனி/பண்ணைப்புரத்தில் 11.5 பவுன் நகைகள் திருட்டுபண்ணைப்புரத்தில் 11.5 பவுன் நகைகள் திருட்டு
பண்ணைப்புரத்தில் 11.5 பவுன் நகைகள் திருட்டு
பண்ணைப்புரத்தில் 11.5 பவுன் நகைகள் திருட்டு
பண்ணைப்புரத்தில் 11.5 பவுன் நகைகள் திருட்டு
ADDED : ஜூன் 24, 2024 02:06 AM
உத்தமபாளையம் : பண்ணைப்புரம் அருகே உள்ள கரியணம் பட்டியில் பூட்டியிருந்த வீட்டிற்குள் பீரோவில் இருந்த ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள 11.5 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து கோம்பை போலீசார் விசாரிக்கின்றனர்.கரியணம்பட்டி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முருகேசன் 58.
இவரது மனைவி சசிகலா 52. இருவரும் கேரளாவில் உள்ள தங்களின் ஏலத்தோட்டத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்றிருந்தனர். வீட்டை பண்ணைப்புரத்தில் வசிக்கும் மாமியார் விஜயா, தினமும் வந்து பார்த்துச் செல்வது வழக்கம்.இந்நிலையில் கடந்த ஜூன் 5 ல் வீட்டிற்கு வந்த மாமியார், துணிகளை சலவை செய்து காயப்போட்டு சென்றுள்ளார். அதன் பின் கடந்த 20 நாட்களாக மாமியார் வரவில்லை. வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதாக மாமியாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை காணவில்லை என்பது தெரிந்தது. உடனே தனது மருமகனுக்கு தகவல் தெரிவித்தார். கேரளாவிலிருந்து வந்த முருகேசன், கோம்பை போலீசில் புகார் செய்தார். திருடு போனது 11.5 பவுன் தங்க நகைகள் ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ளது என புகாரில் கூறியுள்ளார். எஸ்.ஐ. சரஸ்வதி விசாரிக்கிறார்.