பள்ளிகளில் யோகா தின விழா கொண்டாட்டம்
பள்ளிகளில் யோகா தின விழா கொண்டாட்டம்
பள்ளிகளில் யோகா தின விழா கொண்டாட்டம்
ADDED : ஜூன் 23, 2024 04:38 AM

கம்பம்: கம்பம் நாலந்தா இன்னோவேஷன் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் மலர் விழி முன்னிலை வகித்தார். முதல்வர் மோகன் வரவேற்றார். பள்ளி அரங்கத்தில் ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆசனம் மற்றும் அதன் செயல்முறை பற்றியும் செய்வதால் ஏற்படும் பயன்கள் பற்றியும் விரிவாக விளக்கி பேசினர். தனி நபர் யோகா மற்றும் மாஸ் யோகா நடைபெற்றது. யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆசிரியை பபிதா விளக்கி பேசினார். மாஸ் யோகாவை யோகா ஆசிரியைகள் ஜெனிபர், அர்ணிசா தேவி, முருகேஸ்வரி தீபா ஸ்ரீ ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியைகள் அபிநயா, யுவஸ்ரீ, சூர்ய பிரபா செய்திருந்தனர்.
பெரியகுளம்: வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்து பேசியதாவது: மனதிற்கும், உடலுக்கும் வலிமையை கொடுக்கும் ஆற்றல் கொண்டது யோகா. யோகா கற்றுக் கொண்டால் நேர்மறை எண்ணங்கள் வளர்வதுடன், தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றார். தலைமை ஆசிரியர் சின்னராஜா, சமூக ஆர்வலர் செல்வகுமார பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்றனர். உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் விமலா, கீதா ஆகியோர் மாணவர்கள், மாணவிகளுக்கு பல்வேறு யோகாசனங்களை கற்றுக் கொடுத்தனர். இனி வரும் காலங்களில் பள்ளியில் வாரம் இருமுறை யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
போடி: ஸ்பைஸ் வேலி ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் அறிவு திருக்கோயில் மன வளக்கலை மன்றம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி நடந்தது.
முதல்வர் அபிராமி தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாக மேலாளர் பிச்சை முன்னிலை வகித்தார்.
மன வளக்கலை மன்ற நிர்வாக தலைவர் சிவராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா, மூச்சு பயிற்சி செய்யும் முறைகள் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.