/உள்ளூர் செய்திகள்/தேனி/ 'மார்பிங்' செய்து ஆபாச படம் பதிவிட்டதாக பெண்கள் புகார் 'மார்பிங்' செய்து ஆபாச படம் பதிவிட்டதாக பெண்கள் புகார்
'மார்பிங்' செய்து ஆபாச படம் பதிவிட்டதாக பெண்கள் புகார்
'மார்பிங்' செய்து ஆபாச படம் பதிவிட்டதாக பெண்கள் புகார்
'மார்பிங்' செய்து ஆபாச படம் பதிவிட்டதாக பெண்கள் புகார்
ADDED : ஜூன் 17, 2024 12:12 AM
மூணாறு : வட்டவடையில் ஆபாசமாக 'மார்பிங்' செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 2 பெண்கள் போலீசில் புகார் அளித்தனர்.
மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த 22, 24 வயதுடைய பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக ' மார்பிங்' செய்து, முகநுால் உட்பட சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டனர். அதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண்கள் இருவரும் போலீசில் புகார் அளித்தனர். அச்சம்பவம் குறித்து தேவிகுளம் போலீசார், ரகசிய பிரிவினர் ஆகியோர் விசாரிக்கின்றனர். இரண்டு பெண்களில் ஒருவர் திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடதக்கது.