காட்டுப்பன்றி இறைச்சி விற்றவர் கைது
காட்டுப்பன்றி இறைச்சி விற்றவர் கைது
காட்டுப்பன்றி இறைச்சி விற்றவர் கைது
ADDED : ஜூலை 13, 2024 04:46 AM

கூடலுார், : கேரளா குமுளி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.கேரள மாநிலம் குமுளி செங்கரையைச் சேர்ந்தவர் மாரியப்பன் 44.
இவரது வீட்டில் காட்டுப்பன்றி இறைச்சி இருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து ரேஞ்சர் அனில் குமார் சோதனை மேற்கொண்டார். சோதனையில் வீட்டில் இருந்த 11 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, மாரியப்பனை கைது செய்தனர்.