
கம்பம் : கம்பம் அரிமா சங்கப் பொருளாளர் அன்னக்கொடி - மலர்கொடி தம்பதியரின் மகன் சிவபாலன். இவருக்கும் காமாட்சியம்மன் தேங்காய் குடோன் உரிமையாளர் ராஜா -- தவப்ரியா தம்பதியரின் மகள் தேவமித்ராவிற்கும் கம்பத்தில் திருமணம் நடந்தது.
திருமணத்தை பிரமலை கள்ளர் சங்கத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ராமச்சந்திரன் நடத்தி வைத்தார்.
தி.மு.க., மாவட்டச் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், தங்கதமிழ்செல்வன், தி.மு.க., தேர்தல் பணிக்குழுச் செயலாளர் செல்வேந்திரன், முன்னாள் தி.மு.க. அமைப்புச் செயலாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் பங்கேற்றனர்.