
சின்னமனூர் : குச்சனூர் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் - பந்தானம் தம்பதியரின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், கோவில்பட்டி வழக்கறிஞர் சிவா - முத்துலட்சுமி தம்பதியரின் மகன் சந்தோஷ் குமாருக்கும் தேனியில் திருமணம் நடந்தது.தேனி எம்.பி. தங்கதமிழ்செல்வன் தலைமையில், எம்.எல்.ஏ. க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் எம்.பி. செல்வேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் மற்ளும் தேனி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஹோட்டல்கள் சங்க செயலாளர் வி.கே.எஸ்.பேக்கரி உரிமையாளர் சுப்பு இல்ல திருமண விழா நடந்தது. மணமக்கள் விக்னேஸ்வரன் - ராசி ஆகியோரை கர்ணா ஓட்டல் உரிமையாளர் பாலமுருகன், ஆண்டிபட்டி ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பாண்டியன், நாகா மெஸ் உரிமையாளர் பாண்டி, ஓட்டல் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் குரு விலாஸ் அர்ஜுனன், முட்டை வியாபாரி பாலசுந்தரராஜ், கொண்டமநாயக்கன்பட்டி மட்டன் ஸ்டால் உரிமையாளர் சிக்கணன் உட்பட பலர் வாழ்த்தினர்.