/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெரியாறு அணையில் நீர் திறப்பு லோயர்கேம்பில் மின் உற்பத்தி உயர்வு பெரியாறு அணையில் நீர் திறப்பு லோயர்கேம்பில் மின் உற்பத்தி உயர்வு
பெரியாறு அணையில் நீர் திறப்பு லோயர்கேம்பில் மின் உற்பத்தி உயர்வு
பெரியாறு அணையில் நீர் திறப்பு லோயர்கேம்பில் மின் உற்பத்தி உயர்வு
பெரியாறு அணையில் நீர் திறப்பு லோயர்கேம்பில் மின் உற்பத்தி உயர்வு
ADDED : ஜூன் 13, 2024 02:16 AM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 511 கன அடியாக அதிகரித்ததால் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி 46 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஜூன் 1ல் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 200 கன அடி, குடிநீருக்காக 100 கன அடி என மொத்தம் 300 கன அடி திறக்கப்பட்டது.
இதன் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 30 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் நெல் நடவு பணிகள் துவங்கியுள்ளதால் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 300 கன அடியில் இருந்து வினாடிக்கு 511 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் பெரியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்தி 46 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது.
அணை நீர்மட்டம் 118.95 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). பெரியாறில் 4.4 மி.மீ., தேக்கடியில் 1.4 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 317 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 2438 மில்லியன் கன அடியாகும்.
அணையில் இன்று ஆய்வு:
பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் குறித்து இன்று (ஜூன் 13) மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜய்சரண் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு மேற்கொள்கிறது.
மெயின் அணை, பேபி அணை ஆகியவற்றை பார்வையிட்டு அணைக்கு அருகில் உள்ள ஷட்டர் களின் இயக்கங்கள்குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறது.