/உள்ளூர் செய்திகள்/தேனி/ முல்லைப் பெரியாறு அணையில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு முல்லைப் பெரியாறு அணையில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணையில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணையில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணையில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : மார் 14, 2025 02:09 AM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 257 கன அடியாக அதிகரித்தது. இருந்த போதிலும் நேற்று மதியம் கடும் வெப்பம் நிலவியதால் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியான தேக்கடியில் 8 மி.மீ., பெரியாறில் 4.4 மி.மீ., மழை பெய்தது. இதனால் அணைக்கு 'ஜீரோவாக' இருந்த நீர்வரத்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 257 கன அடியாக அதிகரித்தது.
தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக 367 கன அடி திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 114 அடியாக இருந்தது(மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 1567 மில்லியன் கன அடியாகும்.
சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் கடுமையான வெப்பம் நிலவியதால் அணைக்கு நீர்வரத்து ஜீரோவாக இருந்தது. இந்நிலையில் 2 நாட்களாக மழை பெய்ததால் சற்று குளுமை அடைந்தது. இருந்தபோதிலும் நேற்று மீண்டும் மழை குறைந்து வெப்பம் நிலவுவதால் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகப்பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 33 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.