Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ விதிமீறல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

விதிமீறல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

விதிமீறல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

விதிமீறல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஜூன் 15, 2024 06:58 AM


Google News
மதுரை : தேனி பழனிசெட்டிபட்டியில் விதிகளை மீறி செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பழனிசெட்டிபட்டி ஆஜிக் அரபுகனி தாக்கல் செய்த பொதுநல மனு:பழனிசெட்டிபட்டி பூதிப்புரம் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. மதியம் 12:00 முதல் இரவு 10:00 மணிவரைதான் விற்பனை செய்ய வேண்டும்.

ஆனால் சட்டவிரோதமாக 24 மணிநேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. அதிக விலைக்கு விற்கின்றனர். பில் வழங்குவதில்லை. இதற்கு சில போலீசாரும் உடந்தை. மது அருந்துவோர் நகை பறிப்பில் ஈடுகின்றனர். போக்குவரத்து பாதிப்பு உட்பட பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் செய்தோம்.

கடையை மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: பூதிப்புரம் சாலை மற்றும் அதற்கு எதிரே ஒரு சினிமா தியேட்டர் அருகிலுள்ள மற்றொரு டாஸ்மாக் கடையில் விதிமீறல், சட்டவிரோத செயல்கள் குறித்து மனுதாரர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

இரு கடைகளையும் உடனடியாக மூட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் ஜூன் 28 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us