/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரேஷன் கடைகளுக்கு பாமாயில், பருப்பு வரணும் ஆனா வரலை: இரு மாதங்களாக பொதுமக்கள் பரிதவிப்பு ரேஷன் கடைகளுக்கு பாமாயில், பருப்பு வரணும் ஆனா வரலை: இரு மாதங்களாக பொதுமக்கள் பரிதவிப்பு
ரேஷன் கடைகளுக்கு பாமாயில், பருப்பு வரணும் ஆனா வரலை: இரு மாதங்களாக பொதுமக்கள் பரிதவிப்பு
ரேஷன் கடைகளுக்கு பாமாயில், பருப்பு வரணும் ஆனா வரலை: இரு மாதங்களாக பொதுமக்கள் பரிதவிப்பு
ரேஷன் கடைகளுக்கு பாமாயில், பருப்பு வரணும் ஆனா வரலை: இரு மாதங்களாக பொதுமக்கள் பரிதவிப்பு
ADDED : ஜூன் 21, 2024 04:54 AM
ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருள்கள் மாதந்தோறும் வினியோகிக்கப்படுகிறது. ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி பெரும்பாலும் கடத்தல்காரர்கள் வீடு வீடாக சென்று வாங்கி மூடை, மூடையாக கடத்துகின்றனர்.
பாமாயில், பருப்பு, சர்க்கரை வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலை விற்பதால் பொதுமக்கள் பெரும்பாலும் ரேஷனில் வழங்கும் பாமாயில், பருப்பு, சர்க்கரையை தவறாமல் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
கடந்த மே மாதம் பாமாயில் மற்றும் பருப்பு வினியோகம் செய்யவில்லை. காரணம் தேர்தல் நடைமுறையால் ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் சப்ளையாக வில்லை என்றனர். தற்போது ஜூன் கடைசி வாரம் ஆன நிலையிலும் இதுவரை கடந்த மே மாதம் மற்றும் நடப்பு மாதத்திற்குரிய பருப்பு,பாமாயில் வழங்கவில்லை.
சில நாட்களுக்கு முன் கலெக்டர் ஷஜீவனா, மே மாதத்திற்குரிய பருப்பு, பாமாயில் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தார்.
ஆனால் ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் சென்று கேட்டால், வரணும் ஆனால் இன்னமும் பருப்பு பாமாயில் வரவில்லை என்கின்றனர். மார்க்கையன்கோட்டை, குச்சனூர், ராயப்பன்பட்டி, கம்பம், உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களுக்கு பாமாயில், பருப்பு வகைகள் ஒதுக்கீடு செய்யவில்லை.
இது தொடர்பாக உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் கேட்டதற்கு, இந்த மாதத்திற்குள் பொருள்கள் வந்து விடும்.
முதலில் மே மாத ஒதுக்கீட்டையும், அதனை தொடர்ந்து ஜூன் மாத ஒதுக்கீட்டையும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். இப்போதைக்கு பொருள்கள் இன்னமும் வரவில்லை என்றனர். மாவட்ட நிர்வாகம் ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்த பருப்பு, பாமாயில் சர்க்கரை வந்து சேர்ந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.