Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ நீர்பிடிப்பில் மழை பெய்தும் உயராத வைகை நீர்மட்டம்

நீர்பிடிப்பில் மழை பெய்தும் உயராத வைகை நீர்மட்டம்

நீர்பிடிப்பில் மழை பெய்தும் உயராத வைகை நீர்மட்டம்

நீர்பிடிப்பில் மழை பெய்தும் உயராத வைகை நீர்மட்டம்

ADDED : ஜூன் 06, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
ஆண்டிபட்டி:நீர்ப்பிடிப்பு பகுதிகளில், சில வாரங்களில் அடுத்தடுத்து மழை பெய்தும் வைகை அணை நீர்மட்டம் உயரவில்லை.

வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகளால் நீர் வரத்து கிடைக்கும். மே 10ல் வைகை அணை நீர்மட்டம் 56.66 அடியாக இருந்த நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களின் பாசனத்திற்காக அணையில்தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனால், அணை நீர்மட்டம் மே 27ல் 47.80 அடியாக குறைந்தது.

சில வாரங்களாக வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் அடுத்தடுத்து மழை பெய்து வருகிறது. ஆனால் அணைக்கு நீர்வரத்து கிடைக்கவில்லை. அணை நீர்மட்டம் உயரவில்லை.

நேற்று முன்தினம் காலை நீர்மட்டம் 47.70 அடியாக இருந்தது. மொத்த உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 185 கன அடி.

மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us