/உள்ளூர் செய்திகள்/தேனி/ மழை இன்றி நீர்வரத்து குறைந்த வைகை ஆறு மழை இன்றி நீர்வரத்து குறைந்த வைகை ஆறு
மழை இன்றி நீர்வரத்து குறைந்த வைகை ஆறு
மழை இன்றி நீர்வரத்து குறைந்த வைகை ஆறு
மழை இன்றி நீர்வரத்து குறைந்த வைகை ஆறு
ADDED : ஜூன் 12, 2024 12:18 AM

ஆண்டிபட்டி : கடந்த சில நாட்களாக வைகை நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் குன்னூர் வைகை ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளது.
வருஷநாடு மலைப்பகுதியில் பெய்யும் மழையால் மூல வைகை ஆற்றில் வரும் நீர் வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர், அம்மச்சிபுரம் வழியாக வைகை அணையில் சேர்கிறது.
பெரியாறு அணையில் திறக்கப்படும் நீர், போடி கொட்டக்குடி ஆறு, தேனி முல்லை ஆறு மூலம் கிடைக்கும் நீரும் அம்மச்சியாபுரம் அருகே மூல வைகை ஆற்றில் சேர்ந்து வைகை அணைக்கு செல்கிறது. வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து மழை பெய்தது. மழையால் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டது.
தற்போது மழைக்கான சூழல் மாறியதுடன் மீண்டும் வெயில் தாக்கம், காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. மலைப்பகுதியில் இருந்து வரும் மூல வைகையாற்று நீர் மணல்பாங்கான பகுதிகளை கடந்து வரும்போது வற்றி விடுகிறது.
பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரும் மிக குறைந்த அளவே வைகை அணைக்கு சென்று சேருகிறது. இதனால் தற்போது குன்னூர் வைகை ஆற்றில் நீர்வரத்து சிறிய கால்வாய் அளவில் சுருங்கி விட்டது. நேற்று வைகை அணைக்கான நீர் வரத்து ஏதும் இல்லை. ஜூன் 7ல் 47.80 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 47.61 அடியாக இருந்தது. அணையிலிருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி,- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது.