ஊருணியில் மூழ்கி இரு மாணவர்கள் பலி
ஊருணியில் மூழ்கி இரு மாணவர்கள் பலி
ஊருணியில் மூழ்கி இரு மாணவர்கள் பலி
ADDED : ஜூலை 31, 2024 01:47 AM
பெரியகுளம்:தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி ஊருணியில் குளித்த பள்ளி மாணவர்கள் சவுந்திரபாண்டியன் 13, தென்றல் 11, நீரில் மூழ்கி பலியாகினர்.
வடுகபட்டி வாணியர் தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் சவுந்திரபாண்டி. அதே ஊர் வள்ளுவர் தெரு பாண்டி மகன் தென்றல். இங்குள்ள தனியார் பள்ளியில் முறையே 8 மற்றும் 6 ம் வகுப்பு படித்தனர். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து விட்டு விளையாட சென்றனர். வடுகபட்டியிலிருந்து - மேலகாமக்காபட்டி ரோட்டில் கட்டையன் ஊருணியில் இருவரும் குளித்த போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினர். இரவில் அந்த வழியாக சென்றவர் ஊரணி கரையில் மாணவர்கள் ஆடையும், மாணவர் ஒருவர் தண்ணீரில் மிதப்பதையும் பார்த்தார். பெரியகுளம் தீயணைப்பு வீரர்கள் பலியான இரு மாணவர்கள் உடலையும் மீட்டனர். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
--