ADDED : ஜூன் 05, 2024 02:55 AM

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரம் தனியார் மில்லுக்கு பின்புறம் உள்ள பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அப்பகுதிக்கு சென்றனர்.
அங்கிருந்து தப்பி ஓடிய இருவரை மடக்கிப்பிடித்தனர்.
அவர்களிடம் இருந்த வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் 'டேப் பென்டாடல் ஹைட்ரோகுளோரைடு - 100 மி.லி. கிராம் 20 மாத்திரைகள் கொண்ட அட்டைகளை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் அவர்கள் ஆண்டிபட்டி முத்துசங்கிலிபட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் 24, குன்னூர் வள்ளுவர் காலனியைச் சேர்ந்த அருண்குமார் 23, என்பது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார் போதை மாத்திரை விற்பனையில் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா என விசாரித்து வருகின்றனர்.