/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுற்றுச்சூழல் மாசு குறைக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி சுற்றுச்சூழல் மாசு குறைக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
சுற்றுச்சூழல் மாசு குறைக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
சுற்றுச்சூழல் மாசு குறைக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
சுற்றுச்சூழல் மாசு குறைக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

மாசில்லா சூழல்
சிராசுதீன், சித்தா டாக்டர் : நான் பணியாற்றும் காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார வளாகம் பசுமை வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. மூலிகைத் தோட்டம் ஒன்றை அமைத்துள்ளேன். சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்கிறது. இங்குள்ள அத்தி மரத்தில் கொத்து கொத்தாய் காய்த்து தொங்கும் அத்தி பழங்களை சிகிச்சை பெற வரும் பொது மக்கள் பறித்துச் செல்கின்றனர். அத்தி பழம் மருத்துவ குணம் கொண்டதாகும். மூலிகை தோட்டத்தில் உள்ள ஆடாதொடை, துாதுவளை, பச்சிலை, பிரண்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை பறித்து செல்கின்றனர். ஒவ்வொருவரின் வீட்டிலும் மூலிகைச் செடிகள் வளர்க்க வலியுறுத்தி அதற்கான உதவிகளையும் செய்து வருகின்றோம். சுற்றுப்புறச் சூழல் மாசில்லாமல் இருந்தால், நோய்கள் தாக்காது. எனவே மூலிகைச் செடிகள் வளர்ப்பு, அதன் பயன்கள் குறித்து சிகிச்சைக்கு வருபவர்களிடம் விளக்கிக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்., என்றார்.