/உள்ளூர் செய்திகள்/தேனி/ புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 1590 பேருக்கு பயிற்சி புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 1590 பேருக்கு பயிற்சி
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 1590 பேருக்கு பயிற்சி
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 1590 பேருக்கு பயிற்சி
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 1590 பேருக்கு பயிற்சி
ADDED : ஜூலை 03, 2024 05:41 AM
தேனி : தேனி எஸ்.பி., அலுவலகத்தில் அமல்படுத்தப்பட்ட 3 குற்றவியல் சட்டங்கள் குறித்த பயிற்சியினை 1590 போலீசார் நிறைவு செய்துள்ளனர்.
மக்களவையில் 2023 டிசம்பர் 19 ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா எனவும், சி.ஆர்.பி.சி. எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம் முறையே பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா எனவும், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சிய சட்டம் முறையே பாரதிய சாக் ஷிய அதினியம் என பெயரிடப்பட்டு, முக்கிய அம்சங்களில் திருத்தம் செய்து மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டங்கள் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. இதற்கான பயிற்சி தேனி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் 2024 மே 14 அன்று துவங்கியது. பயிற்சிக்காக 1829 பேர் விசாரணை அதிகாரிகள், நிலைய எழுத்தர்கள், கணினி ஆப்ரேட்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேனி சட்டக்கல்லுாரி பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர். தற்போது வரை மொத்தம் உள்ள 1829 பேரில் 1590 பேர் பயிற்சியை நிறைவு செய்தனர்.
எஞ்சிய 239 பேர் பயிற்சி பெற உள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், ஜூன் 30க்குள் பயிற்சியை நிறைவு செய்ய உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்கு போலீசார் செல்ல இருந்ததால் 239 பேர் பயிற்சி பெற வில்லை. விரைவில் அவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும்.', என்றனர்.