/உள்ளூர் செய்திகள்/தேனி/ மழை குறைந்தும் இயல்பு நிலைக்கு திரும்பாத சுற்றுலாப் பகுதிகள் மழை குறைந்தும் இயல்பு நிலைக்கு திரும்பாத சுற்றுலாப் பகுதிகள்
மழை குறைந்தும் இயல்பு நிலைக்கு திரும்பாத சுற்றுலாப் பகுதிகள்
மழை குறைந்தும் இயல்பு நிலைக்கு திரும்பாத சுற்றுலாப் பகுதிகள்
மழை குறைந்தும் இயல்பு நிலைக்கு திரும்பாத சுற்றுலாப் பகுதிகள்
ADDED : ஜூலை 22, 2024 07:29 AM

மூணாறு: மூணாறில் மழை குறைந்தும் சுற்றுலா பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. மூணாறிலும் மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக ஜூன் 15ல் 24 செ.மீ., மழை பெய்தது. காற்றுடன் பெய்த பலத்த மழையில் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டன. அதேபோல் மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதமடைந்ததால் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்த நிலையில் நேற்று சிறிது வெயில் முகம் தென்பட்டது. கடந்த ஒரு வாரமாக பலத்த மழையை கண்டு அச்சமடைந்த மக்கள் வெயில் முகத்தை பார்த்து நிம்மதி அடைந்தனர்.
திரும்பவில்லை
மழை குறைந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய போதும் சுற்றுலாப் பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.மாட்டுபட்டி, குண்டளை ஆகிய அணைகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சுற்றுலா படகு சேவை ஜூன் 15ல் நிறுத்தப்பட்டது. தற்போது மழை குறைந்தபோதும் பலத்த காற்று வீசியதால் படகு சேவையை துவங்க இயலவில்லை.