ADDED : ஜூலை 08, 2024 12:07 AM
தேனி: பழனிசெட்டிபட்டி போலீஸ் எஸ்.ஐ., இதிரிஸ்கான் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வாழையாத்துப்பட்டி ரயில்வே தெரு பாண்டியின் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். கடையில் சட்டவிரோத விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 19,776 மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் பாண்டி கைது செய்யப்பட்டார்.