/உள்ளூர் செய்திகள்/தேனி/ கத்தியை காட்டி மிரட்டி அலைபேசி பறிப்பு கத்தியை காட்டி மிரட்டி அலைபேசி பறிப்பு
கத்தியை காட்டி மிரட்டி அலைபேசி பறிப்பு
கத்தியை காட்டி மிரட்டி அலைபேசி பறிப்பு
கத்தியை காட்டி மிரட்டி அலைபேசி பறிப்பு
ADDED : ஜூலை 28, 2024 04:25 AM
பெரியகுளம் : பெரியகுளம் அருகே அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் முத்துபாபு 23. பஞ்சாப் மாநிலத்தில் ஓட்டலில் வேலை செய்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு பெரியகுளம் வந்தார். தென்கரை மூன்றாந்தல் தனியார் மதுபார் அருகே
முத்து பாபு நடந்து செல்லும் போது, அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த சூர்யா 26. கத்தியை காட்டி மிரட்டி முத்துபாபுவின் அலைபேசியை பறித்துக் கொண்டு தப்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துபாபு, தனது மாமா சகாயராஜ் உதவியுடன், கல்லார் ரோட்டோரம் நின்று கொண்டிருந்த சூர்யாவை பிடித்து வடகரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.