ADDED : ஜூன் 30, 2024 05:11 AM
தேனி : தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் கோடங்கிபட்டியை சேர்ந்த மகேந்திரன் அலைபேசி கடை வைத்துள்ளார். இவரது கடையை மறைத்து தேனி ஆற்றுப்பாலம் பகுதியை சேர்ந்த அம்சு தள்ளுவண்டியை நிறுத்தி பலாபழம் வியாபாரம் செய்தார்.
இதனை மகேந்திரன் மனைவி ஜமுனா தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த அம்சு அவரது மனைவி பரமேஸ்வரி, மகன் தனுசு ஆகியோர் இணைந்து ஜமுனாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். ஜமுனா புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.