/உள்ளூர் செய்திகள்/தேனி/ பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு போட்டி பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு போட்டி
பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு போட்டி
பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு போட்டி
பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு போட்டி
ADDED : ஜூலை 29, 2024 12:18 AM
கம்பம் : கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளியின் திருக்குறள் பேரவை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான பேச்சு போட்டிகள் நடந்தன. இதில் 20 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இப்பள்ளியின் திருக்குறள் பேரவை சார்பில் பேச்சு போட்டிகள் பள்ளி வளாகத்தில் நடந்தது. தாளாளர் விஸ்வநாதன் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார்.
இன்றைய சூழலில், 'வள்ளுவம் காட்டும் அரசியல் நெறி', 'பொருளாதார நெறி', 'சமுதாய நெறி' பொருந்துமா என்ற மூன்று தலைப்புகளில் மாணவ, மாணவிகள் பேச அழைக்கப்பட்டனர். கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், கூடலூர் பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்று பேசினர்.
நடுவர்களாக பாரதி இலக்கிய பேரவை தலைவர் பாரதன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள் சேதுமாதவன், தாத்துராஜ், கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரி தமிழ்த்துறை துணைப் பேராசிரியர் தமிழ் செல்வி ஆகியோர் இருந்தனர்.
முதல் பரிசாக ரூ.7500, இரண்டாம் பரிசு ரூ.5000, மூன்றாம் பரிசு ரூ.2500 சான்றிதழுடன் வழங்கப்படும் என்று திருக்குறள் பேரவை தலைவர் சுருளிவேல் கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரவைச் செயலாளர் முருகன், துணை தலைவர் நாகராசன், பொருளாளர் முத்துக்காமு, துணைச் செயலாளர் வைரக் கண்ணன், பள்ளி முதல்வர் மோகன், துணை முதல்வர் மலர்விழி ஆகியோர் செய்திருந்தனர்.