/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாநில காதுகேளாதோர் கிரிக்கெட் போட்டியில் தேனி அணி சாம்பியன் மாநில காதுகேளாதோர் கிரிக்கெட் போட்டியில் தேனி அணி சாம்பியன்
மாநில காதுகேளாதோர் கிரிக்கெட் போட்டியில் தேனி அணி சாம்பியன்
மாநில காதுகேளாதோர் கிரிக்கெட் போட்டியில் தேனி அணி சாம்பியன்
மாநில காதுகேளாதோர் கிரிக்கெட் போட்டியில் தேனி அணி சாம்பியன்
ADDED : ஜூன் 06, 2024 04:21 AM

தேனி : பட்டுக்கோட்டையில் நடந்த காதுகேளாதோருக்கான கிரிக்கெட் போட்டியில் தேனி அணி முதலிடம் பிடித்தது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தனியார் கல்லுாரி மைதானத்தில் மாநில அளவிலான காதுகேளாதோருக்கான கிரிக்கெட் போட்டி ஜூன் 1,2ல் நடந்தது. இப்போட்டியில் தேனி, தஞ்சை, கோவை, அரியலுார் உள்ளிட்ட பத்து மாவட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் தஞ்சை, தேனி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற தஞ்சை அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய தேனி வாரியர்ஸ் அணி 6 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 50 ரன் எடுத்தது. சேசிங் செய்த தஞ்சை அணி 6 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் மட்டும் பெற்றது. இப் போட்டியில் தேனி அணி முதலிடம் வென்றது. போட்டியில் அணியை சக்திவேல் வழிநடத்தினார். பாலாஜி, பரணிதரன், செல்வராஜ், திவான், பொன்னுசாமி, லடிக்ஷன், நரேஷ், கோடிஸ்வரன், சரவணன், விக்னேஷ், அருள்பாண்டி, மகேஷ்பாபு ஆகிய வீரர்கள் விளையாடினர். வெற்றி பெற்ற வீரர்களை பெற்றோர்கள், நண்பர்கள் பாராட்டினர்.