/உள்ளூர் செய்திகள்/தேனி/ துார்வாரப்படாத சாக்கடையால் அதிகரிக்கும் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 6வது வார்டு பொது மக்கள் அதிருப்தி துார்வாரப்படாத சாக்கடையால் அதிகரிக்கும் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 6வது வார்டு பொது மக்கள் அதிருப்தி
துார்வாரப்படாத சாக்கடையால் அதிகரிக்கும் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 6வது வார்டு பொது மக்கள் அதிருப்தி
துார்வாரப்படாத சாக்கடையால் அதிகரிக்கும் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 6வது வார்டு பொது மக்கள் அதிருப்தி
துார்வாரப்படாத சாக்கடையால் அதிகரிக்கும் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 6வது வார்டு பொது மக்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 10, 2024 04:58 AM

தேனி, : சாக்கடை துார்வாராததால் சுகாதாரகேடு, பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து நடந்து செல்லும் போதே தடுமாறி விழும் அவல நிலை, எலிகளால் ஆவணங்களுக்கு கிழியும் நிலை.' என, பொதுமக்கள் அடிப்படை பிரச்னைகளால் அவதிப்படுவதாக தேனி அல்லிநகரம் நகராட்சி 6வது வார்டு மக்கள் புலம்புகின்றனர்.
தேனி நகராட்சி 6வது வார்டில் மருதையன், வீராச்சாமி, கோபால், சுந்தர்ராஜ், ஜில்லம்மன், பாலி, முத்துபாலி, மூர்த்தி, காமாட்சி, பஜார், விலானி, கருப்பன், மாடசாமி கோயில் என்ற பெயர்களில் 36 தெருக்கள் உள்ளன. இத்தெருக்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
இந்த வார்டிற்கு உட்பட்ட ஜில்லமன் தெரு, சுந்தர்ராஜ் தெருக்களில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக சுத்தம் செய்வதில்லை.
சாக்கடை கால்வாய் மீது அமைக்கப் பட்டுள்ள இணைப்புப் பாலங்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் மண் நிறைந்து கழிவு நீர் செல்ல வழி இன்றி காணப்படுகிறது.
இதில் ஜில்லமன் தெருவில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாட்டில் இல்லை. இந்த தொட்டி ரோட்டில் இடையூறாக உள்ளது. இதனை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாக்கடை கழிவுநீர் தேக்கத்தால் கொசுக்கடியால் இங்குள்ள பலருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சில தெருக்களில் நாய்கள் தொல்லையும் அதிகம் உள்ளது. தெருக்களில் பொது மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
சுந்தர்ராஜ் தெருவில் இருந்து அருகில் உள்ள வீராச்சாமி குறுக்குத்தெருவிற்கு உப்புத்தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தண்ணீர் கொண்டு செல்லும் குழாய் சேதமடைந்துள்ளதால் பல நேரங்களில் தண்ணீர் வீணாகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.
கொசுத் தொல்லை அதிகரிப்பு
கவிதா ஜில்லமன் தெரு: சாக்கடைகள் சரிவர துார்வாருவது இல்லை. ஆறு மாதங்களுக்கு முன் துார்வாரினர். மண் நிரம்பிய சாக்கடையில் கழிவுநீர் செல்ல இயலாமல் பல இடங்களில் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் பலர் நோய் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். சாக்கடையை துார்வாரவும், இப்பகுதியில் கொசு மருந்து தெளிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.
தடுமாறி விழவைக்கும் ரோடுகள்
நல்லம்மாள், சுந்தர்ராஜ் தெரு: பல இடங்களில் பேவர் பிளாக் ரோடுகள் பெயர்ந்து ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பகலில் நடந்து செல்லும் போது தடுமாறி விழும் நிலை உள்ளது. இரவில் டூவீலர்களில் வருவோர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
அதே போல் இப்பகுதியில் எலிகள் தொல்லை அதிகம் உள்ளது. இதனால் வீடுகளில் வைத்துள்ள ஆவணங்கள் உள்ளிட்டவை சேதமடையும் நிலை உள்ளது. ரோட்டினை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.