/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் சப்---டிவிஷன் புகார்தாரர் குறைதீர் 'பெட்டிஷன் மேளா' ஒரே நாளில் 224 மனுக்களுக்கு உடனடி தீர்வு தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் சப்---டிவிஷன் புகார்தாரர் குறைதீர் 'பெட்டிஷன் மேளா' ஒரே நாளில் 224 மனுக்களுக்கு உடனடி தீர்வு
தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் சப்---டிவிஷன் புகார்தாரர் குறைதீர் 'பெட்டிஷன் மேளா' ஒரே நாளில் 224 மனுக்களுக்கு உடனடி தீர்வு
தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் சப்---டிவிஷன் புகார்தாரர் குறைதீர் 'பெட்டிஷன் மேளா' ஒரே நாளில் 224 மனுக்களுக்கு உடனடி தீர்வு
தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் சப்---டிவிஷன் புகார்தாரர் குறைதீர் 'பெட்டிஷன் மேளா' ஒரே நாளில் 224 மனுக்களுக்கு உடனடி தீர்வு

தேனி
தேனி சப்டிவிஷனில் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் பெட்டிஷன் மேளா நடந்தது. இதில் 114 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. தேனி, அல்லிநகரம், அனைத்து பெண்கள் போலீஸ் ஸ்டேஷனில் மனுக்கள் அளித்தவர்களை தேனி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தனியார் மண்டபத்திற்கு வரவழைத்து அவர்கள் மனுக்கள் விசாரித்து தீர்வு வழங்கப்பட்டது. மூன்று போலீஸ் ஸ்டேஷனில் மனுக்கள் அளித்திருந்த 137 மனுதாரர்கள் வர அழைப்பு விடுக்கப்பட்டு, 55 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் பெறப்பட்ட 75 மனுக்களுக்கு வீரபாண்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மேளா நடந்தது. இதில் 59 மனு தாரர்களுக்கு தீர்வு வழங்கப்பட்டது. இரு இடங்களில் நடந்த மேளாக்களை இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், சிவராமகிருஷ்ணன், கண்மணி, இளவரசன் ஒருங்கிணைத்திருந்தனர். தேனி சப் டிவிஷனில் மொத்தம் 114 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
ஆண்டிபட்டி
ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம்மேற்பார்வையில்நடந்த 'பெட்டிசன் மேளா'வில்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 70 மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.
பெரியகுளம்
பெரியகுளம்சப்-டிவிஷன் போலீஸ் ஸ்டேஷன்களில் டி.எஸ்.பி., (பொ) குருவெங்கட்ராஜ்மேற்பார்வையில் நடந்த பெட்டிஷன் மேளாவில்40 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.