Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ உடைகற்கள் திருட்டு; லாரி டிரைவர் கைது

உடைகற்கள் திருட்டு; லாரி டிரைவர் கைது

உடைகற்கள் திருட்டு; லாரி டிரைவர் கைது

உடைகற்கள் திருட்டு; லாரி டிரைவர் கைது

ADDED : ஜூலை 08, 2024 12:05 AM


Google News
தேவதானப்பட்டி: குள்ளப்புரம் அருகே அரசு அனுமதி இன்றி உடைகற்களை டிப்பர் லாரியில் சட்டவிரோத விற்பனைக்கு கொண்டு சென்ற பொம்மிநாயக்கன்பட்டி லாரி டிரைவர் ராஜேந்திரனை 37, ஜெயமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் எஸ்.ஐ., முருகபெருமாள் தலைமையிலான போலீசார் குள்ளப்புரம்- பொம்மிநாயக்கன்பட்டி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டிப்பர் லாரியில் அரசு அனுமதி இன்றி 3 யூனிட் உடை கற்கள் விற்பனைக்கு கொண்டு செல்வது தெரிந்தது. போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த குள்ளப்புரத்தைச் சேர்ந்த விஜய் மனைவி நிரஞ்சனியிடம் விசாரணை நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us