Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றவர் போலீசை கீழே தள்ளி டூவீலரில் தப்பினார்

சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றவர் போலீசை கீழே தள்ளி டூவீலரில் தப்பினார்

சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றவர் போலீசை கீழே தள்ளி டூவீலரில் தப்பினார்

சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றவர் போலீசை கீழே தள்ளி டூவீலரில் தப்பினார்

ADDED : ஜூலை 04, 2024 02:40 AM


Google News
தேவதானப்பட்டி:தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே அதிகாலையில் போலீஸ் சோதனை சாவடியில் டூவீலரில் நிற்காமல் சென்ற மர்ம நபரை விரட்டி சென்ற போலீசை கீழே தள்ளிவிட்டு மற்றொரு டூவீலரை பறித்து தப்பினார்.

தேவதானப்பட்டி அருகே டி.காமக்காபட்டியில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லையில் உள்ள இந்த சோதனை சாவடியில் இரு மாவட்ட போலீசார் இணைந்து பணி செய்வார்கள்.

கொடைக்கானல் ரோட்டில் டூவீலரில் கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரிப்பால் போலீசார் வாகன சோதனையில் தீவிரப்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஸ்டேஷன் ஏட்டு நரேந்திரசிங் 41, பெரியகுளம் போலீஸ்காரர் கார்த்திக் 35, தேவதானப்பட்டி ஏட்டு செல்வராஜா 41 இணைந்து டி.காமக்காபட்டி சோதனை சாவடியில் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் அதிகாலை 4:30 மணிக்கு வெவ்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானல் நோக்கிசென்ற ஆறு டூவீலர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது (டி.என்.50 பி.ஒய் 1892) பதிவு எண் கொண்ட டூவீலரில் வந்தவர் சோதனை சாவடியில் நிற்காமல் போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்துவிட்டு கொடைக்கானல் ரோட்டில் வேகமாக சென்றார். அவரை ஏட்டு நரேந்திரசிங், சோதனைக்காக நிறுத்தியிருந்த மதுரை காளிதாஸ் 25, என்பவரின் டூவீலரை ( டி.ஏ.எல்.1760) ஓட்டி மர்ம நபரை 200 மீட்டர் துாரம் விரட்டி சென்று பிடித்தார். அதன்பின் ஏட்டு ஓட்டி வந்த டூவீலரை ரோட்டோரம் நிறுத்திவிட்டு, மர்ம நபரின் டூவீலர் பின்னால் உட்கார்ந்து சோதனை சாவடிக்கு டூவீலரை ஓட்டுமாறு கூறினார்.

டூவீலரை ஓட்டுவது போல் நடித்த மர்ம நபர் திடீரென டூவீலருடன் ஏட்டுவை கீழே தள்ளிவிட்டு, ஏட்டு ஓட்டி வந்த காளிதாசின் டூவீலரை எடுத்து சென்று காட்ரோடு வழியாக தப்பினார். தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல்மணிகண்டன், மர்மநபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us