ADDED : ஜூன் 16, 2024 05:27 AM
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே புல்லக்காபட்டி ஜக்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி 48.
இவர் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 70 மதுபாட்டில்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தார். தேவதானப்பட்டி போலீசார் தங்கப்பாண்டியை கைது செய்து, மது பாட்டில்களை கைப்பற்றினர்.