/உள்ளூர் செய்திகள்/தேனி/ மதுரை-போடி ரயிலை 121 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் இன்று நடக்கிறது மதுரை-போடி ரயிலை 121 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் இன்று நடக்கிறது
மதுரை-போடி ரயிலை 121 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் இன்று நடக்கிறது
மதுரை-போடி ரயிலை 121 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் இன்று நடக்கிறது
மதுரை-போடி ரயிலை 121 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் இன்று நடக்கிறது
ADDED : ஜூன் 16, 2024 05:21 AM
தேனி: மதுரை - போடி அகலரயில் பாதை வழித்தடத்தில் 121 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் இன்று(ஜூன் 16) நடக்கிறது. இம் மார்க்கத்தில் பொதுமக்கள் கவனமுடன் தண்டவாளத்தை கடக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
போடி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் இயக்க துவங்கி ஓராண்டுகள் ஆகிறது. தற்போது போடியில் இருந்து மதுரைக்கு விரைவு ரயில் தினமும், சென்னைக்கு அதிவிரைவு ரயில் வாரத்தில் மூன்று நாட்களும் இயக்கப்படுகிறது. போடி -மதுரை வழித்தடம் மின் பாதையாக மாற்றும் பணி 6 மாதங்களாக நடந்து வருகிறது. இன்று மதுரை - போடி வழித்தடத்தில் 121 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி தண்டவாளத்தின் உறுதி தன்மை குறித்து சோதனை ஓட்டம் நடக்கிறது. மதுரையில் மதியம் 1:30 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 3:00 மணிக்கு போடி வந்தடையும். மறுமார்க்கத்தில் போடியில் மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு மாலை 5:00 மணிக்கு மதுரை செல்லும். எனவே மதுரை போடி ரயில் தண்டவாளத்தில் நாளை பொதுமக்கள் கவனமுடன் கடந்து செல்ல வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், தற்போது இந்த வழித்தடத்தில் ரயில் 100 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் ரயில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக இந்த சோதனை ஓட்டம் நடக்கிறது என்றனர்.