/உள்ளூர் செய்திகள்/தேனி/ கண்மாய் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளவில்லை கண்மாய் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளவில்லை
கண்மாய் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளவில்லை
கண்மாய் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளவில்லை
கண்மாய் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளவில்லை
ADDED : ஜூலை 18, 2024 05:11 AM

சின்னமனுார் : 'சின்னமனுார் உடைய குளம், செய்குளம் பராமரிப்புப் பணிகளை உலக வங்கி வழங்கிய நிதியை பயன்படுத்தி முறையாக மேற்கொள்ளவில்லை.' என, சின்னமனுார் விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து சின்னமனுார் விவசாயிகள் சங்கம், உலக வங்கி பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அண்ணா பல்கலையின் நீரியல் துறைத் தலைவர் மாதவிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
தேனி மாவட்டத்தில் கடந்த 2018 ல் உலக வங்கி சில கண்மாய் பராமரிப்பிற்கு என நிதி வழங்கியது. கம்பம் வீரப்பன்குளம் கண்மாய், சின்னமனுார் உடைய குளம், செங்குளம், வீரபாண்டி கண்மாய் போன்ற கண்மாய்கள் பொதுப் பணித்துறையினரால் உலக வங்கி நிதியில் பராமரிக்கப்பட்டது. அந்த பணிகள் எந்த அளவிற்கு விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது, அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்த கடந்த வாரம் மாதவி தலைமையிலான குழுவினர் வந்தனர். அந்த குழு கம்பம், சின்னமனுார், வீரபாண்டி கண்மாய்களை ஆய்வு செய்து விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டனர். சின்னமனுாரில் நடந்த கூட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தை அழைக்கவில்லை. எனவே அவர்கள் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் விவசாயிகள் சங்க தலைவர் ராஜா, உலக வங்கி பிரதிநிதிகள் குழு தலைவர் மாதவிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில்,'கடந்த 2018 ல் உடைய குளம், செங்குளத்தில் மடைகள் சரி செய்யவில்லை, கண்மாய் தூர்வாரவில்லை. கரைகள் பலப்படுத்தப்பட வில்லை. நாங்கள் இதையெல்லாம் கூறுவோம் என்பதால் எங்களை அழைக்கவில்லை. 2018 ல் உதவி செயற்பொறியாளராக இருந்த அன்புச்செல்வம் சரிவர பணிகளை செய்யவில்லை. ஏற்கெனவே கலெக்டருக்கு புகார் அனுப்பி உள்ளோம். எனவே இப்போதாவது கண்மாய் பராமரிப்புப் பணிகளை முழுமையாக செய்வதற்கு, தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.', என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.