/உள்ளூர் செய்திகள்/தேனி/ கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்க தொழில் நுட்ப பயிற்சி கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்க தொழில் நுட்ப பயிற்சி
கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்க தொழில் நுட்ப பயிற்சி
கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்க தொழில் நுட்ப பயிற்சி
கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்க தொழில் நுட்ப பயிற்சி
ADDED : ஜூன் 13, 2024 06:44 AM
தேனி: கால்நடைகளின் ஆரோக்கியம், அதன் உற்பத்தித் திறனை உள்நாட்டு நவீன தொழில்நுட்ப அறிவின் மூலம் செம்மைப்படுத்துவதற்கான பயிற்சி முகாம் தப்புக்குண்டில் உள்ள தேனி கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது.
திட்ட முதன்மை ஆராய்ச்சியாளர் செந்தில்குமார் பயனாளிகளை வரவேற்று திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
மருத்துவக் கல்லுாரி முதல்வர் ரிச்சர்டுஜெகதீசன் திட்ட தொழில்நுட்பத்தை அறிமுகம் படுத்தினார்.
பின், அறிகுறிகளற்ற நிலையில் கறவை மாடுகள் வளர்ப்போருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு, அதனை சீரமைப்பதற்கான விபரங்களை விளக்கினார். மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் கோயில்ராஜா, குஜராத் தேசிய புத்தாக்க நிறுவன விஞ்ஞானி ரவிக்குமார், கால்நடை துறையின் நலம், உற்பத்தித் திறன், உள்நாட்டு தொழில்நுட்பங்கள், பயன்பாடுகள் குறித்து விளக்கினார். இதனைத் தொடர்ந்து கால்நடை டாக்டர்கள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடந்தது. நிகழ்வில் திட்ட துணை ஆராய்ச்சியாளர்கள், கால்நடை சிகிச்சை வளாகத்தின் தலைவர் இணைப் பேராசிரியர் மேதை, உதவி பேராசிரியர்கள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் உதவி இயக்குனர்கள் டாக்டர் சுப்பிரமணியன் (பெரியகுளம்), சிவரத்னா (உத்தமபாளையம்) உள்ளிட்டோர் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.