Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

ADDED : ஜூலை 29, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
கம்பம்: மேகமலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் காலை முதல் மேகமலை பகுதியில் சாரல் மழை விடாமல் பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில்கூடுதல் மழை பெய்து வருகிறது.

மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு , வெண்ணியாறு, இரவங்களாறு, மகாராசா மெட்டு , துாவானம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சுருளி அருவிக்கு கூடுதல்தண்ணீர் வரத்து இருந்தது.

நேற்று காலை வழக்கமான ரோந்துபணிக்கு வனத்துறையினர் சென்ற போது, சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது தெரிந்தது. உடனடியாக குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து ரேஞ்சர் பிச்சை மணி கூறுகையில், 'சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளப் பெருக்கு குறைந்தால் தான் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும்.', என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us