Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ பள்ளி  மாணவர்கள் சேமிப்பு கணக்கு துவங்க தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம் தேனி கோட்ட தபால் கண்காணிப்பாளர் தகவல்

பள்ளி  மாணவர்கள் சேமிப்பு கணக்கு துவங்க தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம் தேனி கோட்ட தபால் கண்காணிப்பாளர் தகவல்

பள்ளி  மாணவர்கள் சேமிப்பு கணக்கு துவங்க தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம் தேனி கோட்ட தபால் கண்காணிப்பாளர் தகவல்

பள்ளி  மாணவர்கள் சேமிப்பு கணக்கு துவங்க தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம் தேனி கோட்ட தபால் கண்காணிப்பாளர் தகவல்

ADDED : ஜூலை 05, 2024 05:28 AM


Google News
தேனி: மத்திய, மாநில அரசின் கல்வி உதவித் தொகை பெற பள்ளி மாணவர்கள் தபால்துறையில் சேமிப்பு கணக்கு துவங்க நடந்து வரும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று மாணவர்கள் பயனடையலாம்.' என, தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: தபால்துறையும், தமிழ்நாடு கல்வித்துறையும் கடந்த மே 31ல் பள்ளி மாணவர்களுக்கான அரசின் கல்வி உதவித் தொகையை வரவு வைக்கும் வகையில் அனைத்து மாணவருக்கும் எவ்வித குறைந்தபட்ச கட்டணம் இல்லாமல் (பூஜ்ஜியம் தொகையில்) தபால் அலுவலக சேமிப்பு மற்றும் இண்டியன் போஸ்டல் பேமெண்ட் வங்கி கணக்கு துவக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த சேமிப்பு கணக்கு துவங்க மாணவர்களுக்கு ஆதார், மாணவர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம், பெற்றோரின் கைப்பேசி எண் அவசியம். சில மாணவர்களுக்கு கணக்கு தொடங்கும்போது, அவர்களது ஆதார் எண்ணில் கைரேகை, அலைபேசி எண் அப்டேட் இல்லாததால் கணக்கு தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் தலைமை தபால் அலுவலகங்களில் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை ஆதார் சேவை மையம் செயல்படுகிறது. அருகில் உள்ள துணை தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை செயல்படுகிறது.

பொது மக்கள், மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஆதாரில் பயோமெட்ரிக், அலைபேசி எண் பதிவேற்றம் செய்து, கல்வி உதவித்தொகை பெறலாம். கணக்கு துவங்க விரும்புவோர் ஜூலை 15க்குள் தபால் அலுவலகங்களுக்கு சென்று பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us