ஆண்டிபட்டி: பாலக்கோம்பை அருகே அழகாபுரியை சேர்ந்தவர் மகாராஜன் 43, இவரது மனைவி பிரபாவதி 38, திருப்பூரில் இருந்த இவர்கள் சமீபத்தில் உறவினர் இறப்புக்காக சொந்த ஊரான அழகாபுரிக்கு சென்றுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக மகாராஜன் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இரு நாட்களுக்கு முன் பூச்சி மருந்து குடித்துவிட்டு வைகை அணை ரவுண்டானா அருகே படுத்துவிட்டார்.
தான் பூச்சி மருந்து குடித்த விபரத்தை அவரது தம்பி விஜயகுமாருக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார். அவரை தேனி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பலன் இன்றி நேற்று முன்தினம் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.