/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேர்தல் பார்வையாளரிடம் செலவு கணக்கு சமர்ப்பிப்பு தேர்தல் பார்வையாளரிடம் செலவு கணக்கு சமர்ப்பிப்பு
தேர்தல் பார்வையாளரிடம் செலவு கணக்கு சமர்ப்பிப்பு
தேர்தல் பார்வையாளரிடம் செலவு கணக்கு சமர்ப்பிப்பு
தேர்தல் பார்வையாளரிடம் செலவு கணக்கு சமர்ப்பிப்பு
ADDED : ஜூலை 04, 2024 02:07 AM

தேனி: தேனி லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்கும் பணி நிறைவடைந்தது.
தேர்தலில் வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ. 95 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன் இரு முறையும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் இறுதி செலவு கணக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தேனி தொகுதியில் போட்டியிட்ட 25 வேட்பாளர்கள் செலவு கணக்குகளை செலவின பார்வையாளர்கள் தரம்வீர் தண்டி, கனிஸ்ட்யாசு விடம் ஓட்டுப்பதிவிற்கு முன்பு சமர்ப்பித்தனர்.இறுதி செலவு கணக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் பார்வையாளர் கனிஸ்ட்யாசுவிடம் ஒப்படைத்தனர். இப்பணி நேற்றுடன் நிறைவடைந்தது. தேர்தல் கணக்குகள் ஒருங்கிணைப்பாளர் முகமது அலி ஜின்னா ஒருங்கிணைத்தார். தேர்தல் கணக்கு பிரிவு அதிகாரிகள் கணக்குகளை சரிபார்க்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். கணக்குகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால், குறிப்பிட்ட வேட்பாளரை அழைத்து சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது.