/உள்ளூர் செய்திகள்/தேனி/ சந்துரு கமிட்டி பரிந்துரைக்கு எதிர்ப்பு மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு சந்துரு கமிட்டி பரிந்துரைக்கு எதிர்ப்பு மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
சந்துரு கமிட்டி பரிந்துரைக்கு எதிர்ப்பு மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
சந்துரு கமிட்டி பரிந்துரைக்கு எதிர்ப்பு மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
சந்துரு கமிட்டி பரிந்துரைக்கு எதிர்ப்பு மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
ADDED : ஜூலை 13, 2024 04:42 AM
கம்பம் : ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கமிட்டியின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு கமிட்டியின் பரிந்துரையில் கள்ளர் பள்ளி, ஆதிதிராவிடர் பள்ளிகளின் பெயர்களில் உள்ள ஜாதியை நீக்க பரிந்துரை செய்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புக்கள் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன் - பேரில் தேனி மாவட்டத்தில் வெள்ளையம்மாள்புரம், மார்க்கையன் கோட்டை, பாலார்பட்டி மேலக் கூடலூர், கம்பம், கருநாக்கமுத்தன்பட்டி, அம்மாபட்டி பள்ளிகளில் மாணவர்கள் புறக்கணிப்பு செய்தனர். பெரியகுளம் சரகத்தில் அம்மாபட்டி, ராஜதானி, கதிர்நரசிங்கபுரம், மாயாண்டிபட்டி, ராமகிருஷ்ணாபுரம், அணைக்கரைப் பட்டி, பிராதுக்காரன்பட்டி பள்ளிகளில் வகுப்புக்களை மாணவர்கள் புறக்கணித்தனர். தேனி, போடி ஒன்றியங்களில் 20 சதவீத மாணவர்கள் வந்திருந்ததாக கள்ளர் சிரமைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் பங்கேற்கவில்லை -