/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேசிய சிலம்ப போட்டிக்கு மாணவர்கள் தேர்வு தேசிய சிலம்ப போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
தேசிய சிலம்ப போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
தேசிய சிலம்ப போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
தேசிய சிலம்ப போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
ADDED : ஜூலை 18, 2024 05:20 AM
போடி : மாநில அளவில் நடந்த சிலம்பாட்டப் போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம் பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
தமிழ்நாடு அஸ்டடோ அகடா சிலம்பாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி தஞ்சாவூரில் நடந்தது. 700 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 14 வயதுக்கு உட்பட்ட 38 முதல்- 41 கிலோ எடைப் பிரிவில் போடி ஜ.கா.நி.. மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநயா, 60 முதல்- 64 கிலோ எடைப் பிரிவில் போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி விஷாலி, 17 வயதுக்குள் 41 முதல்- 44 கிலோ எடைப் பிரிவில் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுகதர்ஷினி, 52 -முதல் 56 கிலோ எடைப் பிரிவில் போடி திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவி அனுசுயா, 56 -முதல் 60 கிலோ எடைப் பிரிவில் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பாண்டி மீனா, 60 -முதல் 64 கிலோ எடைப் பிரிவில் துர்க்கை வேணியும், 64 முதல்- 68 கிலோ எடைப் பிரிவில் போடி ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளி மாணவர் அருண் பாண்டியன், 19 வயதுக்கு கீழ் 44 முதல் -48 கிலோ எடை பிரிவில் தேனி நாடார் சரஸ்வதி கல்லுாரி மாணவி காருண்யா ஆகியோர் முதலிடம் பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகினர்.
12 வயதுக்கு கீழ் 24 முதல்- 28 கிலோ எடைப் பிரிவில் போடி ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளி மாணவி சக்தி ஸ்ரீ, 34 -முதல் 38 கிலோ எடைப் பிரிவில் தேனி லிட்டில் கிங்டம் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி தேஜாஸ்ரீ, 17 வயதுக்கு கீழ் 38 - முதல் 41 கிலோ எடைப் பிரிவில் போடி ஜ.கா.நி., மேல் நிலைப் பள்ளி மாணவி நித்ய ஸ்ரீ இரண்டாம் இடமும் பெற்றனர்.
19 -முதல் 23 கிலோ எடைப் பிரிவில் போடி காமராஜ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி பிரகதீசா, 24 முதல்- 28 கிலோ எடை பிரிவில் போடி ஜ.கா.நி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரித்திஷா, 41 கிலோவுக்கு மேற்பட்ட எடைப் பிரிவில் ஹேவந்த், 14 வயதுக்கு கீழ் 40க்கு மேல் எடைப் பிரிவில் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுகப்பிரியா, 44 எடைக்கு மேல் போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சஞ்சய், 71 கிலோ எடைப் பிரிவில் 7வது வார்டு நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் நாவலன் மூன்றாம் இடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை தேனி மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் குமார், துணைத் தலைவர் சதீஷ்குமார், செயலாளர் சொக்கர் மீனா, சிலம்பாட்ட கழக தொழில் நுட்ப இயக்குனர் நீலமேகம், மாஸ்டர்கள் மோனீஸ்வர், தீபன் சக்கரவர்த்தி, வாஞ்சிநாதன் ஆகியோர் பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.