/உள்ளூர் செய்திகள்/தேனி/ டவுன் பஸ்கள் நின்று செல்லும் இடத்தை மாற்ற நடவடிக்கை தேவை டவுன் பஸ்கள் நின்று செல்லும் இடத்தை மாற்ற நடவடிக்கை தேவை
டவுன் பஸ்கள் நின்று செல்லும் இடத்தை மாற்ற நடவடிக்கை தேவை
டவுன் பஸ்கள் நின்று செல்லும் இடத்தை மாற்ற நடவடிக்கை தேவை
டவுன் பஸ்கள் நின்று செல்லும் இடத்தை மாற்ற நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 03, 2024 03:45 AM
ஆண்டிபட்டி: பெரியகுளத்தில் இருந்து ஆண்டிபட்டிக்கு வரும் டவுன் பஸ்கள் எம்.ஜி.ஆர்., சிலை அருகே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால், நெருக்கடி தவிர்க்க முடியாமல் ஏற்படுகிறது. இதனால் பஸ் நிறுத்தப்படும் இடத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் எம்.ஜி.ஆர்., சிலை அருகே ரோட்டில் டிவைடர் அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டின் ஓரம் வரை விரிவாக்கம் செய்யப்பட்ட கடைகள், அப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் ரோட்டை ஒட்டிய பகுதியில் பொது மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. இந்நிலையில் பெரியகுளத்தில் இருந்து ஆண்டிபட்டிக்கு வரும் டவுன் பஸ்கள் ஒரு வழி பாதையாக உள்ள ரோட்டில் நிறுத்தப்படுவதால் பின்னால் வரும் வாகனங்களால் கடந்து செல்ல முடியவில்லை. சில நிமிடங்கள் வாகனங்கள் நின்று செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் பாதிப்பு ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வரும்போது மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
பாப்பம்மாள்புரம் அருகே ரோட்டின் ஓரத்தில் விரிவான இடம் உள்ளது. பெரியகுளத்தில் இருந்து வரும் டவுன் பஸ்களை அப்பகுதியில் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு குறையும். போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.